spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'இறைவன்' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

இறைவன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

கடந்த 2015 இல் வெளியான தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை வாமனன், மனிதன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாக இருந்த சூழ்நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ