Homeசெய்திகள்இந்தியா14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!

-

 

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!
File Photo

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முடிந்தவரை இணைந்துச் சந்திக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முடிவுச் செய்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு”- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டணியில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவைச் சேர்ந்த சஞ்சய் ராவத், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், சமாஜ்வாதி கட்சியின் ஜாவேத் அலிகான், ஐக்கிய ஜனதா தளத்தின் லாரன்ஸ் சிங், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மக்களவைத் தொகுதி பங்கீடு குறித்தப் பணிகளை இந்த குழு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைத் தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!

தேர்தலில் எதிர்க்கட்சிகள் இயன்றவரை இணைந்துப் போட்டியிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு செய்வது குறித்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா வெல்லும் என்ற பெயரில் தகவல் தொடர்பு மற்றும் ஊடக யுக்திகள் மூலமாக பரப்புரைகளை ஒருங்கிணைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

MUST READ