ஹரிஷ் கல்யாண் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டீசல், லப்பர் பந்து உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவரின் எல் ஜி எம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இவருடன் இணைந்து இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனமும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.