சந்திரயான்-3ன் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, சிலீப் மோடு நிலைக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடி அறிவிப்பு!
APXS மற்றும் LIBS ஆகிய கருவிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோ தெரிவித்துள்ளது. சோலார் பேனல் வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி சூரியன் உதயத்தின் போது,ஒளியைப் பெறும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பணியைத் தொடருவதற்காக ரோவர் விழித்துக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இல்லையெனில், நிலவுக்கான இந்திய தூதரக ரோவர் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23- ஆம் தேதி சந்திரயான்- 3ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது. பின்னர் அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர், நிலவின் ஊர்ந்துச் சென்று ஆய்வு மேற்கொண்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!
இரும்பு, அலுமினியம், சல்பர் போன்ற கனிமங்கள் இருப்பதையும், ஆக்சிஜன் உள்ளதையும் உறுதிச் செய்தது. நிலவில் 14 நாட்கள் பகல் பொழுது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த 14 நாட்கள் இரவு பொழுதாக இருக்கும் என்பதால், ரோவர் சிலீப் மோடு நிலைக்கு சென்றிருக்கிறது.