Homeசெய்திகள்சினிமாஎம் ஜி ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி: கார்த்தி 26!!!

எம் ஜி ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி: கார்த்தி 26!!!

-

எம் ஜி ஆர் வேடத்தில் கார்த்தியின் நடிப்பில் உருவாகும் 26 வது படம். நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகிறது.

எம் ஜி ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி: கார்த்தி 26!!!

திரைக்கு வந்த குக்கூ ,ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கியுள்ள படம் “ஜப்பான் “.அதில் கார்த்தி ஜோடியாக, அணு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜி .வி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் .இது கார்த்தி நடிக்கும் 25வது படமாகும்.

அதை தொடர்ந்து கார்த்தி எம் ஜி ஆர் இன் தீவிர ரசிகர் வேடத்தில் நடிக்கிறார். இதில் அவர் சில ஹிட் படங்களில் எம்ஜிஆர் ஏற்றிருந்த சில கெட்டப்பில் தோன்றுகிறார். முன்னதாக அதற்கான தனி போட்டோசெஷன் சென்னையில் நடந்தது .அந்த போட்டோக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்காலிகமாக கார்த்தி 26 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. ஹீரோயினாக கிருத்தி ஷெட்டி ,முக்கிய வேடங்களில் சத்யராஜ் ,ராஜ்கிரண் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஆக்சனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்திற்கு “ரத்தத்தின் ரத்தமே”,” வா வாத்தியாரே “ஆகிய தலைப்புகளில் ஒரு தலைப்பு சூட்டப்படும் என்று தெரிகிறது.

MUST READ