Homeசெய்திகள்ரஜினி, நெல்சனை அடுத்து அனிருத்திற்கும் பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

ரஜினி, நெல்சனை அடுத்து அனிருத்திற்கும் பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

-

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் பரிசு வழங்கியுள்ளார்.
ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் மெகா பிளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாடும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினி, நெல்சன் இருவருக்கும் தனித்தனியாக காசோலை மற்றும் விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார். அவர்களைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் அனிருத்திற்கும் காசோலை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். விலை உயர்ந்த கார் ஒன்றும் அனிருத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைவதற்கு அனிருத்தின் இசையும் முக்கிய காரணமாகும். அனிருத்தின் பிஜிஎம் ஜெயிலர் படத்திற்கும் ரஜினியின் ஸ்டைலிற்கும் ஏற்ப அமைந்துள்ளது. இவரின் மாஸான பிஜிஎம் படத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. இந்நிலையில் அனிருத்திற்கும் பரிசு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

MUST READ