தீயவர் குலைகள் நடுங்க படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து பிக் பாஸ் அபிராமி, ஜிகே ரெட்டி ,லோகு, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி எஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி அருள்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
பரத் ஆசிவகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.