Homeசெய்திகள்சினிமாசித்தார்த் அபிமன்யுவிற்கு இணையான ஒரே ஆள் இவர்தான்.... 'தனி ஒருவன் 2' அப்டேட்!

சித்தார்த் அபிமன்யுவிற்கு இணையான ஒரே ஆள் இவர்தான்…. ‘தனி ஒருவன் 2’ அப்டேட்!

-

தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் வில்லனாக மிரட்டி இருந்த அரவிந்த் சுவாமியின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கதாபாத்திரம் தற்போது வரை பெரிய அளவில் பேசப்படுகிறது.

இந்நிலையில் 7 வருடங்கள் கழித்து தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சமீபத்தில் தனி ஒருவன் 2 படத்தின் ப்ரோமோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் வில்லனாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது.  இதில் வில்லனாக நடிகர் பகத் பாஸில் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாஸில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்திருந்தார். இதனால் பஹத் பாசில் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ