டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் ‘பாரத்’ என அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை எழுந்துள்ளது. வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்றே குறிப்பிடப்படும்.
சித்தார்த் அபிமன்யுவிற்கு இணையான ஒரே ஆள் இவர்தான்…. ‘தனி ஒருவன் 2’ அப்டேட்!
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் சாசனத்தின் 1ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கும் அச்சுறுத்தல் வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
100 குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை பிரித்து கொடுக்கப் போகிறேன்… விஜய் தேவரகொண்டா அறிவிப்பு!
அதேபோல், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமன்ந்தா பிஸ்வாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பாரத் எனக் குறிப்பிட்டு, நமது நாகரிகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறது. பாரத குடியரசுக்கு வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார்.