Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

-

 

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
Photo: BCCI

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக திட்டம்

அதன்படி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 4 ஆல் ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
PHOTO: BCCI

விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகம்மது ஷமி, சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என மாற்றமா?

இந்தியாவில் அக்டோபர் 05- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ