Homeசெய்திகள்சினிமாதெறிக்கவிடும் 'ஜவான்'.... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் அப்டேட்!

தெறிக்கவிடும் ‘ஜவான்’…. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் அப்டேட்!

-

அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் 85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஜவான் திரைப்படம் முதல் நாள் வசூலில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தையே தூக்கி சாப்பிட்டுள்ளது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம் ஆகும். அதே சமயம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு பல வகையில் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.
அதன்படி இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படம் ரிலீசுக்கு முன்பே 10 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஷாருக்கானின் பதான் திரைப்படத்தைப் போல இந்தப் படமும் அதிக வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ