Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்'.... டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’…. டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!

-

- Advertisement -

லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் லால் சலாம் படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு டப்பிங் பேசி வருகிறார். இது சம்பந்தமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது தந்தையுடன் டப்பிங் பணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

MUST READ