ஓடிக்கொண்டிருந்த காரில் திடீர் தீ
ஆந்திர மாநிலம் நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டுருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் 5 பேரும் உடனடியாக இறங்கியதால் உயிர்தப்பினர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் விடவலூர் மண்டலம் சவுக்கசர்லா கிராமத்தில் இருந்து புஜபுஜ நெல்லூருக்கு காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சென்று கொண்டுருந்தனர். கார் நெல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டுருந்தபோது திடிரென முன்புறத்தில் இருந்து புகை வருவதை கவனித்து அனைவரும் கீழே இறங்கினர். சில நிமிடங்களிலேயே கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைப்பதற்கு கார் முழுவதும் எரிந்தது. உயிர் சேதம் ஏதுமின்றி குடும்பத்தினர் இறங்கியதால் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.