Homeசெய்திகள்ஆவடிசாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:

சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:

-

ஆவடி அருகே சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து அதில் இருந்த ஆவின் பால் கொட்டி வீணானதால் நஷ்டம் ஏற்பட்டது.

சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:

கொரட்டூர் பால்பண்ணையில் இருந்து ஆவடி வெள்ளலூர் தனியார் கல்லூரிக்கு ஆவின் பால் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது .திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் காவலர் குடியிருப்பு அருகே நள்ளிரவு 2 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் மாடுகள் படுத்து கொண்டிருந்தன.மாடுகள் மீது மோதாமல் இருக்க டிரைவர் சிஜி லாரியை திடீரென திரும்பியுள்ளார்.இதில் நிலை தடுமாறியுள்ள லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர். இதில் லாரி கவிழ்ந்ததில் 80 லிட்டர் ஆவின் பால் சாலையில் கொட்டி ஆறு போல் ஓடியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிரேன் வரவைத்து லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. விபத்து காரணமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த பால் சாலையில் கொட்டி வீணானதால் நுகர்வோர் சிரமத்துக்குள்ளனர். இதுகுறித்து ஆவடி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லால் சலாம் படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் விபத்துக்கு காரணமாக சாலையில் படுக்கும் மாடுகளை பிடிக்க வேண்டும். திருமுல்லைவாயல் பகுதியில் எரியாமல் இருக்கும் மின்விளக்குகளை உடனடியாக சரி செய்ய மாநகராட்சி  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறினார்.

MUST READ