பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரஸெல்ஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
அப்போது ராகுல் காந்தி எம்.பி. கூறியதாவது, “ஜி20 மாநாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.
நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறைக் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.