ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (செப்.08) இரவு 07.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தார்.
“மாரிமுத்துவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!
இந்தியாவில் உள்ள தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நாளை (செப்.09) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, சவூதி அரேபியா, மெக்சிகோ, அர்ஜெண்டினா தென்கொரியா, கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நிதியம், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (செப்.08) இரவு 07.30 மணியளவில் இந்தியாவுக்கு வருகைத் தந்துள்ளார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், அமெரிக்க அதிபரை வரவேற்றார்.
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
வரும் செப்டம்பர் 10- ஆம் தேதி வரை ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தனியே சந்தித்துப் பேசும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி20 நாடுகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.