ஜி20 உச்சி மாநாடு இன்று (செப்.09) தொடங்க உள்ள நிலையில், டெல்லி முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில், சீனா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேஷியா, ஜெர்மனி, தென் கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், மெக்சிகோ, சவூதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிற்கு புதிய பாதையை வகுக்கும் என நம்புகிறேன். இரண்டு நாள் நடக்கும் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவுள்ளன. 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.