Homeசெய்திகள்இந்தியா'உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு'- தீர்மானம் நிறைவேற்றம்!

‘உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு’- தீர்மானம் நிறைவேற்றம்!

-

 

'உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு'- தீர்மானம் நிறைவேற்றம்!
Photo: PMO

டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் 18-வது ஜி20 உச்சி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது

அதில், உக்ரைனில் நீடித்த அமைதி நிலவப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும், உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகளை நிலைநிறுத்தும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், ஐக்கிய நாடுகள் சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்பாக ஜி20 மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் போரால் உலகளவில் உணவுத் தானியம், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மை, வளர்ச்சி உள்ளிட்டவற்றில் உக்ரைன் போர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் கண்டனம் தெரிவித்து ஜி20 உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.

பட்டாபிராம் சி.டி.எச். சாலை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு

அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

MUST READ