ஆந்திராவின் மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு’- தீர்மானம் நிறைவேற்றம்!
ஆந்திர முதலமைச்சரைக் கண்டித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் ஜனசேனா கட்சியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை, தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இழைக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த சந்திரபாபு நாயுடு ஊழலற்ற மாமனிதர்; அவர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!
சந்திரபாபு நாயுடு மீதான வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகளை ஜனசேனா கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மூத்த தலைவர் ஒருவரை ஆந்திர மாநில காவல்துறையினர் கையாண்ட விதமும் ஏற்க முடியாது; ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் அத்துமீறலை காவல்துறை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.