Homeசெய்திகள்இந்தியாஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!

ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!

-

 

ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!

ஆதித்யா- எல்1 விண்கலத்தின் மூன்றாம் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!

சூரியனை ஆய்வுச் செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, படிப்படியாக சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, இரண்டு முறை சுற்றுவட்டப்பாதையின் உயரம் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (செப்.10) அதிகாலை 02.30 மணிக்கு மூன்றாவது முறையாக சுற்றுவட்டப்பாதையின் உயரம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதித்யா- எல்1 விண்கலம் நல்ல முறையில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ மொரீஷியஸ், பெங்களூரு, போர்ட் பிளேயர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆய்வு நிலையங்களில் இருந்து விண்கலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

மீண்டும் செப்டம்பர் 15- ஆம் தேதி அதிகாலை 02.00 மணிக்கு ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

MUST READ