Homeசெய்திகள்அரசியல்கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

-

- Advertisement -

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன. கடலூரில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரியிட்ட நிலையில், மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கியும், காட்டுப் பன்றிகளின் தொல்லையாலும், சுமார் 8,000 ஏக்கரில் விளைந்த கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. மேலும், பயிரிட்ட கரும்பு பயிர்களை, விவசாயிகளே டிராக்டர் கொண்டு உழுது அழித்து வருகின்றனர்.

காட்டுப்பன்றி, நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி

டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நிறைவடைகிறது

கரும்பு சாகுபடி செய்துள்ள நிலப்பரப்பில் மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கியும் மற்றும் காட்டுப்பன்றிகளின் தொல்லையாலும் தமிழகம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப் பளவில் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. எனவே, தமிழம் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, கரும்பு சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து, ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்க வேண்டும்.

MUST READ