Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்பு

பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்பு

-

பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டியலின பெண் சமைத்த காலை உணவை சாப்பிட விடாமல் குழந்தைகளை தடுக்கும் பெற்றோரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காலை உணவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது பலரிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில ஊர்களில் இத்திட்டத்தால் புது பிரச்சனை கிளம்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமையலர் காலை உணவு சமைத்துவழங்குகிறார். ஆனால் காலை உணவு தங்களது குழந்தைகளுக்கு தேவையில்லை எனக்கூறி பெற்றோர் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் கிறிஸ்டி சம்பவ இடத்திற்கு விரைந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

பட்டியலின பெண்

முன்னதாக கரூர் மாவட்டம் வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடாது என கிராம மக்கள் சிலர் போர் கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ