Homeசெய்திகள்க்ரைம்மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்

மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்

-

நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு  பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள்.

மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம்  எஸ்பிஐ காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அசோகன் லாரி டிரைவர் அவரது மனைவி ராஜலெட்சுமி, இவர் அந்த பகுதியில் சில ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார்கள்.இந்நிலையில் ராஜலெட்சுமி அப்பகுதி பெண்களிடம் நட்பினை ஏற்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவரிடமும் தனி தனியாக, தனக்கு பெரும் பண்ணை இருப்பதாவும், அதிலிருந்து தனக்கு வருமானம் வருவதாகவும், ஆனால் தனக்கு இப்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாவும், தனக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால் மகளிர் சுயஉதவிக்குழுவில் தங்கள் பெயரில் கடன் பெற்று தந்தால், அதனை நான் தவறாமல் கட்டி விடுவேன் என அழுது, புலம்பி நீலி கண்ணீர் விடுத்து நம்ப வைத்து அப்பெண்களின் பெயரில் கடனை வாங்கி சிறிது காலம் கடனையும் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்

ராஜலெட்சுமி, இதுபோல் அப்பகுதியில் உள்ள 50த்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் பல்வேறு சுயஉதவிக்குழுகள்கள் மூலம் கடனை பெற்று ரூபாய் கோடிகள் வரை திரட்டியுள்ளார்.இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ராஜலெட்சுமி குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார் .

இந்நிலையில் தவணை தொகையினை வசூல் செய்ய வந்த சுயஉதவிக்குழு ஊழியர்களிடம் பணத்தை செலுத்த அப்பகுதி பெண்கள் ராஜலெட்சுமியை தேடி வந்த போது அவரும் அவரது கணவர் அசோகனும் தலைமறைவானதும், தங்களை போல் ஏராளமான பெண்களிடம் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் ஒன்று திரண்டு அப்பெண்ணின் தனக்கு சொந்தமானது எனக்கூறிய பண்ணையை தேடி சென்றனர். அங்கிருந்த ராஜலெட்சுமியின் தந்தை சுப்பிரமணியும் அவரது தாயார் நாகரெத்தினமும் இங்கு வந்தால் உங்களை அரிவாளால் வெட்டிவிடுவேன் என துரத்தியதாக கூறப்படுகிறது.இதனால் தங்கள் பெயரில் குழுவில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தமுடியாமல், கணவனிடமும், குடும்பத்தாரிடமும், குழு அதிகாரிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

பல பெண்களிடம் 3 முதல் 15 லட்சம் வரை கடன் பெற்று, கோடிகள் வரை சுருட்டி சென்ற ராஜலெட்சுமியால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் . நூதனமான முறையில் ஏராளமான பெண்களை ஏமாற்றி கோடிகளுடன் தலைமை மறைவான ராஜலெட்சுமியை கைது செய்யவேண்டும், தங்களை ஏமாற்றி பெற்ற கடனை தொகையை திரும்ப பெற்று தரவேண்டும் என பணத்தினை பறி கொடுத்த பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

சுயஉதவிக்குழு கடன் பெற்று நம்பிக்கையின் பெயரில் அடுத்தவர்களுக்கு கொடுத்து சிக்கலில் சிக்கி கொள்ளும் பெண்கள், பணத்தை செலுத்த முடியாமல் தற்கொலை நிலைக்கு தள்ளபடுகின்றனர். எனவே இதனை தவிர்க்க சுயஉதவிக்குழு பெண்களுக்கு அரசு உரிய ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி அப்பாவி பெண்களை காப்பற்றவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

MUST READ