Homeசெய்திகள்சினிமாநீர் அடித்து நீர் விலகுமா... அப்பாவைப் பார்க்க ஓடோடி வந்த விஜய்!

நீர் அடித்து நீர் விலகுமா… அப்பாவைப் பார்க்க ஓடோடி வந்த விஜய்!

-

- Advertisement -

விஜய் தற்போது தனது அப்பா சந்திரசேகரை சந்தித்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

இதற்கிடையில் விஜய்யின் அப்பா சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதுகுறித்து சந்திரசேகர் பேசியிருந்த போது “கடந்த சில மாதங்களாகவே என்னால் துடிப்புடன் செயல்பட முடியவில்லை. எனவே மருத்துவரை சந்தித்தேன், அவர் எனக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். உடனே செய்து கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன்” என்று பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வந்த விஜய் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பாவை உடனே சந்தித்துள்ளார். ஷோபா, சந்திரசேகர், விஜய் மூவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வருவது நமக்கு தெரிந்தது.  இதை சந்திரசேகரும் கூட பல இடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இருப்பினும், அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடனே விஜய் ஓடோடி வந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர்.

MUST READ