ஆதித்யா- எல்1 விண்கலம் நான்காவது புவிவட்டச் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!
ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி மூன்றாவது புவி சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. நான்காவது புவி வட்டச் சுற்றுப்பாதைக்கு கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்.15) வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 19- ஆம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா- எல்1 விண்கலம் மாற்றப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!
ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 02- ஆம் தேதி அன்று சூரியனை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சுமார் நான்கு மாத பயணத்திற்கு பின் இலக்கை அடையும் விண்கலம், தொடர்ந்து ஆய்வுப் பணிகளை தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.