Homeசெய்திகள்சென்னைமழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

-

மழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள்; முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து! – சென்னை  மாநகராட்சி எச்சரிக்கை!

அதில், “மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிலர், வடிகாலில் வண்டல் வடிகட்டியை கட்டமைக்காமலும், சாலை சீரமைப்பு பணிகளை நிறைவு செய்யாமலும் விட்டுவிடுவதாக தெரிகிறது. வடிகால் பணிகளுடன், மேல் குறிப்பிட்ட பணிகளையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும் தரமாக முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள கூடாது. குறிப்பிட்ட பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே, ஒப்பந்த தொகை முழுமையாக விடுவிக்கப்படும். இல்லையெனில், தொகை நிறுத்தி வைக்கப்படும். முன்னுரிமை வடிகால் பணிகளை 30ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், ஏற்கனவே 5 ஒப்பந்ததாரர்களுக்கு ₹1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகவே முன்னுரிமை அடிப்படையில் வடிகால்பணிகளை 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பணிகள் நடைபெறும் இடத்தை சுற்று கட்டாயம் பாதுகாப்பு ஏற்பாடு அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

MUST READ