நேற்று திமுக – இன்று அதிமுக: சுரங்கப்பாதை திறப்பின் கொண்டாட்டம்
ஆவடி பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கிடையில் நேற்று நிறைவு பெற்ற சுரங்க பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திமுக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிமுக அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. அலெக்ஸாண்டர் மற்றும் முன்னாள் சிறுபான்மைத்துறை அமைச்சர் எஸ் அப்துல் ரஹீம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணியை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இத்திட்டம் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தபட்டு, திமுக ஆட்சியில் நிறைவு பெற்று நேற்று திமுக அமைச்சர்களால் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அதிமுக-வை சேர்ந்த நிர்வாகிகள் கட்சியினர் மக்கள் பயன்பாட்டிற்கு இத்திட்டத்தை கொண்டு வந்தததை மிகுந்த மகிழ்ச்சியாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.