பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பது அனைவரும் அறிந்ததே. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதன்படி கடந்த 6 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Bigg Boss Tamil Season 7 Grand Launch – அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/di3UPo4T8c
— Vijay Television (@vijaytelevision) September 15, 2023
தற்போது பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஜாக்குலின், ஃபரீனா, ஓட்டுநர் ஷர்மிளா, நடிகர் பிரித்விராஜ், ராஜா ராணி சீரியல் அர்ச்சனா, ரேகா நாயர், ரச்சிதா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 7வது சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்த செப்டம்பர் மாதம் தொடங்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் தாமதமாகி வருகின்ற அக்டோபர் 1 இல் ஒளிபரப்பாக உள்ளது என புதிய ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.