பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொண்டு வரப்பட்டு 18 மணி நேரம் வேலை செய்யும் இல்லத்தரசிகளான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்து இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதிவாய்ந்த பெண்களின் வங்கி கணக்கிற்கு நேற்று முதல் ரூ 1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகள், மற்ற உதவித்தொகை எதையும் பெறாமல் இருந்தால் அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்குப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் ஒப்புதல் அளித்திருந்தார். புதுச்சேரியில் இத்திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது புதுச்சேரியில் 75 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டதாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பொய் தகவலை கூறியுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “பாஜகவினர் பொய் கூறுவதில் கைதேர்ந்தவர்கள். அதில் தமிழிசையும் ஒருவர். தேர்தலில் நிற்க சர்ச்சைக்குரிய வகையில் ஆளுநர் தமிழிசை பேசி வருகிறார். தேர்தலில் நின்று டெபாசிட் வாங்காதவர் தமிழிசை, என்று கூறினார்.