Homeசெய்திகள்விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்...

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

-

- Advertisement -

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

அந்த வகையில், நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2019- ஆம் ஆண்டு டெல்லி- வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  அதன்பிறகு அடுத்தடுத்து பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பல ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையும், சென்னையில் இருந்து கோவை வரையும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக சென்னை – நெல்லை இடையே 600 கீ.மீ. தொலைவுக்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் 8 மணி நேரத்தில்  வந்தே பாரத் ரயில் சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11.00 மணிக்கு நெல்லை சென்றடையும். விரையில் இந்த சேவை தொடங்க இருப்பதால் இந்த ரயிலுக்கு 20631 ஃ 20632 என எண் ஒதுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த அதிரடியாக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கான, வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளும் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ஐசிஎப் தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா  தெரிவித்துள்ளார்.

MUST READ