Homeசெய்திகள்ஆவடிஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்-நான் சி.எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன்

ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்-நான் சி.எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன்

-

- Advertisement -

போக்குவரத்து நெரிசலை போக்க அலுவலக பணி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும்.நான் சி எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன், ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்.காவல் ஆணையர் கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு.

ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்-நான் சி.எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன்ஆவடி காவல் ஆணையர் தலைமையில் பருத்திப்பட்டு பகுதியில் பொதுமக்கள் காவல்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் மற்றும் உதவி ஆணையர் துணை ஆணையர், இணை ஆணையர், காவல் ஆய்வாளர்கள், அதிகாரிகள் பல்வேறு தரப்பட்ட வணிகர் ,சங்க நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளின் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை காவல் ஆணையரிடம் தெரிவித்தனர்.

இதில் ஆவடி பகுதி ஆட்டோ ஓட்டுநர் விக்டர் என்பவர் தனது குறையாக பேசியது, ஆவடி பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மக்கள் தொகை அதிக அளவில் உயர்ந்து கொண்டே போகிற நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர அலுவலக பணி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும். நான் சி எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன்.

ஆட்டோ ஓட்டுநர் விக்டர்
ஆட்டோ ஓட்டுநர் விக்டர்

நீங்கள் சம்பந்தப்பட்ட மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான் என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையை சொல்லவில்லை.ஆவடி பொதுமக்களின் கோரிக்கையாக கூறுகிறேன். இதனை தெரிவித்த அவர் எனக்கு சி எம் ஆக பிறக்க ஆசை என கூறினார்.இவர் இவ்வாறு பேசியது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஆவடி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் வி.சங்கர் பேசுகையில், பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆவடி பகுதியில் வசிக்கின்றனர் .இதில் பள்ளி  வளாகம், பேருந்து நிலையங்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் .மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணிகள் அதிகப்படுத்த வேண்டும்.சிறுவர்கள் கஞ்சா ,மது போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுனர் வி.சங்கர்
ஆட்டோ ஓட்டுனர் வி.சங்கர்

மேலும் தனக்கு ஏற்பட்ட செல்போன் திருட்டு புகார் குறித்தும் அதனை காவல்துறையினர் ஏற்று ஓராண்டு காலமாகியும் கண்டுபிடிக்காத நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்  ஒருவரின் தொடர்பால் பைண்ட் மை டிவைஸ் என்ற கைப்பேசி செயலி மூலம் தன்னுடைய மொபைலை கண்டுபிடித்து தந்ததாகவும் மேலும் தனது நண்பர்கள் ஐந்து பேரின் மொபைல் திருட்டை கண்டுபிடித்து கொடுத்ததாகவும் கூறினார்.இதேபோல் காவல்துறை சார்ந்த அதிகாரிகளும் மொபைல் திருட்டை காலம் தாழ்த்தாமல் கண்டுபிடித்து தர வேண்டும் என ஆணையரிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை ஆணையரிடம் தெரிவித்தனர்.

MUST READ