மம்முட்டி தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரமயுகம். இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் மம்முட்டியுடன் இணைந்து சித்தார்த் பரதா, அர்ஜுன் அசோகன், அமுல்டா லீஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கியிருந்த நிலையில், தற்போது மம்முட்டி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -