Homeசெய்திகள்சினிமாமிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி.... கோபத்தின் உச்சியில் விஜய் ரசிகர்கள்!

மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி…. கோபத்தின் உச்சியில் விஜய் ரசிகர்கள்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் மிஷ்கின். கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்திருக்கும் இவரது படங்கள். எதார்த்தத்தையும் அன்பையும் மையமாகக் கொண்டே இவருடைய படங்கள் பேசும். இவர் இயக்குனர் மட்டுமின்றி நல்ல நடிகராகவும் இருந்து வருகிறார். சமீப காலமாக பல படங்களில் வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார். விஜய் நடிக்கும் லியோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். ஏற்கனவே இவர் லியோ படத்தில் விஜய்யுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு சண்டைக் கட்சியில் நடித்துள்ளதாகவும் ஒரு மேடையில் பேசியுள்ளார். மிஷ்கினின் மேடைப் பேச்சுக்கள் மற்றும் இன்டர்வியூகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. அதேபோல தான் இந்த முறை லியோ படம் குறித்த இன்டர்வியூ ஒன்றில் மிஷ்கின் பேசியதை விஜய் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த பேட்டியில் அவர் ‘விஜய் லியோ படத்தை முழுமையாக பார்த்து விட்டான்’ என்று கூறியுள்ளார். இதனை நடிகர் விஜயை ஒருமையில் பேசி உள்ளதாக ரசிகர்கள் கண்டித்தும் எதிர்வினை ஆற்றியும் வருகின்றனர். அதன் ஒரு படியாக மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இணையவாசிகள் வார்த்தைகளால் வசை பாடி வருகின்றனர்.

MUST READ