Homeசெய்திகள்தமிழ்நாடு"வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்"- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

-

 

தங்கம் தென்னரசு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாகக் காரணங்களுக்காகப் பிடித்தம் செய்யக் கூடாது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வங்கிகளை அறிவுறுத்தியுள்ளார்.

‘சமூக நீதி நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாகக் காரணங்களுக்காகப் பிடித்தம் செய்யக் கூடாது. மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யக் கூடாது என மாநில அரசு, வங்கிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஒப்பந்தத்தை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100- ல் புகார் அளிக்கலாம். உதவி மையத்தில் அளிக்கப்படும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ