Homeசெய்திகள்தமிழ்நாடுதலைவராக இருப்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

தலைவராக இருப்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

-

தலைவராக இருப்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு பொறுமை, கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Image

மதுரை சேதுபதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அரிசி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தவர்கள் பல்வேறு வரலாற்று பின்னணி கொண்டவர்கள், ஒவ்வொரு முதல்வர்களுக்கும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களின் அடிப்படையில் வரலாறு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் I.N.D.I.A கூட்டணியில் பெற முடியாத கவுரவம், செல்வாக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் கிடைத்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி நிதானத்துடன் மிகவும் பொறுமையாக செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி, மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். நீட் தேர்வு ரகசியத்தை மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுவாரா?, எடப்பாடி பழனிசாமிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன, தேவையில்லாத வரலாற்றை வரலாறு தெரியாத அண்ணாமலை பேசி வருகிறார். தலைவராக இருப்பவர்கள் பொருமை, கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும்” என்றார்.

MUST READ