பழனி முருகன் கோயிலுக்குள் கைப்பேசி மற்றும் படப்பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்ல அக்டோபர் 01- ஆம் தேதி முதல் அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐ.சி.சி.யின் கோல்டன் டிக்கெட்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கருவறையின் புகைப்படம், காணொளி போன்றவை அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. பக்தர்கள் பலரும் புகைப்படம் மற்றும் காணொளியைப் பதிவுச் செய்து, அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பி வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள கோயில் நிர்வாகம், வரும் அக்டோபர் 01- ஆம் தேதி முதல் கைப்பேசி மற்றும் படப்பதிவுக் கருவிகளை கோயிலுக்கு கொண்டு வருவதைப் பக்தர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இல்லையெனில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் உரிய கட்டணத்தைச் செலுத்தி, ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்த பிறகு திரும்பப் பெற்று செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.