Homeசெய்திகள்தமிழ்நாடுபயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

-

- Advertisement -

 

ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!
File Photo

இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவைத் திறக்க முயன்ற ராணுவ வீரரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இன்று (செப்.20) டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த ராணுவ வீரர் மணிகண்டன், விமானத்தில் உள்ள அவசர காலக் கதவைத் திறக்க முயன்றுள்ளார். அதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டு பதறினர்.

பழனி கோயிலுக்கு கைப்பேசி, படப்பதிவுக் கருவி எடுத்துச் செல்லத் தடை!

அந்த நபரை விமான ஊழியர்கள் பிடித்து நிறுத்தியதுடன், சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செங்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

MUST READ