Homeசெய்திகள்சென்னைவிஜய் ஆண்டனி மகளின் உடல் நல்லடக்கம்- குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி

விஜய் ஆண்டனி மகளின் உடல் நல்லடக்கம்- குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி

-

- Advertisement -

விஜய் ஆண்டனி மகளின் உடல் நல்லடக்கம்- குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி

விஜய் ஆண்டனி மகளின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீராவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது விஜய் ஆண்டனி குடும்பத்தினர் மீராவின் உடலுக்கு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் செல்லும் வழி நெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய் ஆண்டனி தன் மகளின் இறுதி சடங்கை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மீடியாக்களை அனுமதிக்கவில்லை.

MUST READ