நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தூளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலி
இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், கால் பாதிக்காத துறைகளே இல்லை எனலாம். காலத்திற்கு ஏற்ப சேவைகளை வழங்கி, வர்த்தக வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரராக வலம் வருபவர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இவர் ஒரு துறையில் கால் பதிக்கப்போகிறார் என்றால், அதே துறையில் உள்ள மற்ற நிறுவனங்கள் சற்று அச்சத்தில் ஆள்கின்றன என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சந்தையைப் பிடிக்க சலுகைகளை அள்ளி வழங்குவார்.
அந்த வகையில், இதுவரை காணாத இன்டர்நெட் ஸ்பீடுடன் ஜியோ ரிலையன்ஸ் ஏர்ஃபைபரை முதற்கட்டமாக அகமதாபாத் பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ நிறுவனம்.
பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
குறைந்தபட்சம் 599 ரூபாயில் ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ, அதிகபட்சத் திட்டத்திற்கு 3,999 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏர்டெல் நிறுவனம், Xstream ஏர்ஃபைபர் சேவையை குறைந்தபட்ச கட்டணமாக 799 ரூபாயுடன் தொடங்கியுள்ளது. பொதுவாக, ஏர்ஃபைபர் சேவையைப் பயன்படுத்த கேபிள்கள் தேவைப்படும். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஏர்ஃபைபர் கேபிள்கள் இல்லாமல், ‘PLUG AND PLAY’ என்ற முறையில் 1.5 ஜிபிபிஎஸ் வரை அல்ட்ரா ஸ்பீடு சேவையை வழங்கவுள்ளது.
அதிவேக இணையதள சேவை என்பதால், ஆன்லைன் கேமிங், உயர்தர வீடியோ ஸ்ட்ரீமிங், வீடியோ கான்பரன்சிங் ஆகியவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். கண் இமைக்கும் நேரத்தில் பெரிய கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும். விரிவான கவரேஜ் இருப்பதால் சிக்கலான இடங்களிலும் இணையதள சேவையைப் பெற முடியும்.
பழனி கோயிலுக்கு கைப்பேசி, படப்பதிவுக் கருவி எடுத்துச் செல்லத் தடை!
ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்து தரவுகளைப் பாதுகாக்கும் வலுவான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. அதிவேக இணையத்தைத் தவிர, ஜியோ ஏர்ஃபைபர் குரல் அழைப்பு சேவைகளையும் வழங்குகிறது.