இந்தியா, கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு இன்று (செப்.22) ஆலோசனை மேற்கொள்கிறது.
கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய காதலன்!
கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து இந்திய தூதரகம் வாயிலாக, நிலைமையைக் கண்காணித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கனடா வாழ் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள தமிழக அரசு, அவர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனடா விவகாரம் பற்றி வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், கனடாவில் வசிக்கும் தமிழர்களை மீட்டு, தாயகம் அழைத்து வருவது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக, ஆலோசனை நடத்தப்படவுள்ளது.