Homeசெய்திகள்க்ரைம்மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்

மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்

-

- Advertisement -

மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்

தென்காசியில் மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக தாக்கி தலையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி கொலை

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அடுத்த கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன் மகன் வேலுசாமி. இவரது மனைவி இசக்கியம்மாள். இசக்கியம்மாளுக்கும் அதே ஊரை சேர்ந்த துரைசாமி மகன் முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையறிந்த வேலுசாமி, இசக்கியம்மாளை கண்டித்துள்ளார். ஆனால் மனைவி தன்னை திருத்திக் கொள்ளாததால் இருவருக்கும் இடையில், தகராறு முற்றியுள்ளது. இதனால் இசக்கியம்மாள் தூத்துக்குடியில் உள்ள தனது தந்தைவிட்டீற்கு சென்றுவிட்டார். மனைவி தன்னைவிட்டு பிரிந்ததால் கண்ணாடிகுளம் கிராமத்தில் இருந்து ருக்குமணியம்மாள்புரம் செல்லும் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த, மனைவியின் கள்ளக்காதலன் முருகனை, அரிவாளால் வெட்டி தலையை தனியாக கொண்டுவந்தார்.

கள்ளக்காதலனின் தலையுடன் மனையிடம் சென்ற வேலுசாமி, மனைவியிடம் ’உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்’ என்று கூறியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த இசக்கியம்மாள் காவல்துறையினருக்கு தகவல்தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுசாமியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ