
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது.
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தங்கள் கூட்டணி மேலும் வலுவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, கர்நாடகா மாநிலத்தின் தெற்கு பகுதியில் வலுவானதாக உள்ளது எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு உதவும் என பா.ஜ.க. கருதுகிறது.