Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி!

ஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி!

-

 

ஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி!
Video Crop Image

சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இந்தோனேசியா, வியட்நாம், தைவான், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆசிய விளையாட்டு- அடுத்தடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா!

தொடக்கம் முதல் இந்திய அணியின் வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகிறது. அந்த வகையில், ஆசிய விளையாட்டில் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் பாபு லால் யாதவ்- லேக் ராம் இணை வெண்கல பதக்கத்தை வென்றது.

ஆசிய விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

6 நிமிடங்கள் 50 விநாடிகளில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் பதக்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஏற்கனவே 2 வெள்ளிப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ள நிலையில், டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ