சித்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இந்த படத்தை சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார் இயக்கி உள்ளார்.
எட்டாகி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையிலும் பாலாஜி சுப்பிரமணியன் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், வெளியானது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் சித்தா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் சித்தார்த் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
This one looks very special #Siddharth & #SuArunkumar always loved the content you both choose to give our audience! Happy to launch the Trailer of #CHITHHA https://t.co/nNRkyJgwwy
In Cinemas worldwide Sep 28. Wishes to the team!— Suriya Sivakumar (@Suriya_offl) September 24, 2023
பரபரப்பான கதைக்களத்துடன் கூடிய சித்தப்பா மகள் உறவை பேசும் படமாக இது உருவாகியுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.