Homeசெய்திகள்சினிமாஉமாபதி ராமையா நடிக்கும் 'பித்தல மாத்தி'..... அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

உமாபதி ராமையா நடிக்கும் ‘பித்தல மாத்தி’….. அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி கூட்டணியில் ராஜகிளி எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பித்தல மாத்தி எனும் திரைப்படத்தில் உமாபதி ராமையா நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து சம்ஸ்கிருதி,பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மாணிக்க வித்யா இதனை இயக்கியுள்ளார். எஸ் என் வெங்கட்டின் ஒளிப்பதிவிலும் மோசஸ் என்பவரின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தற்போது இதன் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் வெளியாக இருப்பதாகவும் அந்த புரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ