
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி முறிவு குறித்து மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்; பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை. 2024 மட்டுமல்ல, 2026- ஆம் ஆண்டிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. சிறுபான்மை மக்களைச் சந்தித்து கட்சி நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லுங்கள். எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “நன்றி மீண்டும் வராதீர்கள்” என்ற ஹேஷ்டேக்கை அ.தி.மு.க.வினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.