Homeசெய்திகள்தமிழ்நாடுநான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு- தலைவர்கள் கருத்து!

அதன்படி, தமிழகத்தில் நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஹர் சஹே மீனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓராண்டு காலம் இந்த பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில்துறை இயக்குநராக இருந்த அர்ச்சனை பட்நாயக், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைச் செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக, தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வர்த்தக இயக்குநராக எல்.நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

“கூட்டணி முறிவில் எந்த சந்தேகமும் வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தற்போது நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக உள்ள பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ்., நிர்மல்ராஜ் வகித்து வந்த நிலவியல் மற்றும் சுரங்கங்கள் ஆணையர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

MUST READ