தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு- இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் டெல்லியில் காணொளி மூலம் நடைபெற்றது. அப்போது கர்நாடகா தரப்பில், 161 தாலுக்காக்கள் கடும் வறட்சியாலும், 34 தாலுகாக்கள் மிதமான வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 32 கடுமையான வறட்சி தாலுகாக்களும் காவிரிப் படுகையில் அமைந்துள்ளன.
வறட்சியின் போது, நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது என்று கர்நாடகா வாதத்தை முன் வைத்தது. தமிழக அரசு சார்பில், செப்டம்பர் மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 7 டி.எம்.சி. நீரை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி. வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.
“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
அதேபோல், அக்டோபர் மாதம் திறக்க வேண்டிய 20.22 டி.எம்.சி. தண்ணீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழகம், கர்நாடகா அரசுகளின் வாதங்களை பதிவுச் செய்துக் கொண்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.
“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
அடுத்தக்கட்டமாக, காவிரி மேலாண்மை ஆணையம், இந்த பரிந்துரையைப் பரிசீலித்து கர்நாடகா அரசுக்கு தண்ணீர் திறப்புக் குறித்த உத்தரவைப் பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.