Homeசெய்திகள்சினிமாகுக் வித் கோமாளி புகழ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் குட்டி பாப்பா!

குக் வித் கோமாளி புகழ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் குட்டி பாப்பா!

-

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களாக இணைந்து நடித்துள்ளார்.

மேலும் துடிக்கிறது மீசை, மிஸ்டர் ஜு கிப்பர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அதேசமயம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தனது காதலி பென்சியை திருமணம் செய்து கொண்ட புகழ் சமீபத்தில் தான் தந்தையாக போகிற செய்தியையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் – பென்சி தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.இதுகுறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இரு முறை தாய் வாசம் தெரிய பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள். மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்” என்று தன் குழந்தையின் கால்களை கையில் எழுதிய படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் தந்தையான செய்தியை தெரிவித்துள்ளார்.

MUST READ