Homeசெய்திகள்சினிமா'லவ் யூ டூ ஷாருக் சார்'..... ஜவான் பட வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த விஜய்!

‘லவ் யூ டூ ஷாருக் சார்’….. ஜவான் பட வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த விஜய்!

-

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அட்லீயின் பாலிவுட் அறிமுக படமான ஜவான் தற்போது வரை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு ஷாருக்கான், ” வாழ்த்துக்களுக்கு நன்றி. விஜய் சாரின் அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஐ லவ் விஜய் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஷாருக்கானின் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஜய், ” ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியதற்காக ஷாருக்கான், அட்லீ மற்றும் ஜவான் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். லவ் யூ டூ ஷாருக் சார்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

MUST READ